மன்னார் ஆயர் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா! உட்செல்ல வெளியேறத் தடை

மன்னார் ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஆயர் இல்லத்தில் இருந்து எவரும் வெளியேறவும் உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநேரிய பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது. காய்ச்சல் நோய் காரணமாக கடந்த 7 ஆம் திகதி மன்னார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவர் PCR பரிசோதனை செய்துக்கொண்ட பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

PCR பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான இந்த நபருடன் பழகிய நபர்களை நடையாளம் காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் வசிக்கும் குருமார் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply