தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – வியாழேந்திரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு செயற்பட்டவர்களால் கல்முனை நகர சபை பிரச்சினையைக் கூட தீர்த்து வைக்க வைக்க முடியாமல் போனதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

சர்வதேச ஒப்பந்தங்கள் எமது நாட்டின் பௌதிக வளத்தையும் மனித வளத்தையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும். அவற்றைப் பாதிக்கும் வகையில் எந்த ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply