காணாமல் போன தனது கணவரை 31 வருடங்களாக தேடி அலைந்த தாய் மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டம் முறக்கொட்டான் சேனையை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை திலகவதி என்ற தாயாரே இவ்வாறு சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் சாவடைந்துள்ளார்

1989 ம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரை 31 வருடங்களாக தேடி வந்த தாயாரே இவ்வாறு சாவடைந்துள்ளார்.

இலங்கை அரச படைகளாலும்,துணை இராணுவக்குழுக்களாலும்,கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தந்தையர்கள் சாவடைந்த நிலையில் குறித்த தாயாரும் நேற்றைய தினம் சாவடைந்துள்ளார்

எனினும் இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்புக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று முன் தினமும் தனது மகனை தேடி அலைந்த தாயொருவர் வவுனியாவில் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply