கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,800பேர் வரையில் பாதிப்பு – 11 பேர் பலி

கனடாவில் கொரோனா பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டதோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 73ஆயிரத்து 123பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் , மொத்தமாக 9ஆயிரத்து 541பேர் உயிரிழந்துள்ளனர்.

17ஆயிரத்து 916பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதுவரை ஒரு இலட்சத்து 45ஆயிரத்து 666பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 143பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply