கொழும்பு ICBT கல்வியக மாணவனுக்கு கொரோனா!

கடந்த 4 ஆம் திகதி கொழும்பு ICBT கல்வியகத்திற்கு வருகைத்தந்த மாணவர் ஒருவருக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த கல்வியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விடயம் தெரிய வந்தவுடன் குறித்த மாணவனுடன் வகுப்பறையில் இருந்த ஏனைய மாணவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக ICBT கல்வியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கம் வழங்கியுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ICBT கல்வியகத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த ICBT முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆம் அல்லது அதனை அண்மித்த திகதிகளில் ICBT கல்வியகத்திற்கு வருகைத் தந்தவர்கள் கூடிய கவனத்துடன் செயற்படுமாறு அந்த கல்வியகம் கேட்டுக் கொண்டுள்ளது

Be the first to comment

Leave a Reply