யாழ்.பல்கலை துணை வேந்தர் தாக்கியதாக தெரிவித்து மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.பல்கலை துணை வேந்தர் தாக்கியதாக தெரிவித்து மாணவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலின் போது, துணைவேந்தர் தாக்கியதாக தெரிவித்து மாணவர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே நேற்று(வியாழக்கிழமை)) இரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள் மோதலைக் கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, துணைவேந்தர் நிலத்தில் விழுந்துவிட்டார். அப்போது, விரிவுரையாளர் ஒருவர் தம்மை தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வசந் என்ற மாணவன் நேற்று இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துணைவேந்தர் தன்னை தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக, சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமித்து இன்று மாலை 3 மணிக்கு விசாரணை செய்யப்படுமென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply