மூடப்பட்ட நிலாவெளி பிரதேச வைத்தியசாலை – கொரோனா அச்சம்.

இன்று காலை நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா சந்தேகம் இருப்பதனால் திருமலை தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

இதனால் நிலாவெளி பிரதேச வைத்தியசாலை நாளை இரண்டு மணி வரை மூடப்பட்டிருக்கும் என குறித்த வைத்தியசாலையினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு நோயாளர்கள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறித்த நபர் கடந்த நாட்களில் கொழும்புக்கு சென்று வந்துள்ளது தெரியவந்ததையடுத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், எனினும் PCR பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை எதனையும் உறுதியாக கூறமுடியாது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply