மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் சுயாதீன விசாரணை- நிமல் சிறிபால டி சில்வா

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலாளிமார்கள், தனியார் துறை தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று(07) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலின் போது முதலாளிமார், தனியார் பிரிவு தொழிற்சங்கம் மற்றும் தொழில் அமைச்சு இணைந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்துப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply