மன்னார் ஆயர் இல்லம், ஹொரண வைத்தியசாலை, புத்தக கண்காட்சி ஆகியவற்றில் கொரோனா!

கடந்த மாதம் 3ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கடந்த 6ம் திகதி இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சிலாபம் – அம்பகந்தவெல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கொழும்பு கோட்டை பஸ் நிலைய பகுதிக்கும் சென்றுள்ளார். 

மேலும் கடந்த 30ம் திகதி இவர் நுவரெலியாவிற்கும் சென்றுள்ளார். 

இதேவேளை, மன்னார் மாவட்ட ஆயரின் வீட்டில் மேசன் வேலைக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள அனைவரும் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆயர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் ஹொரண வைத்தியசாலையில் 5 மற்றும் 9ம் இலக்க வாட்டுகள் மூடப்பட்டுள்ளன. 

குறித்த வாட்டுகளில் பணியாற்றிய தாதியர் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

அதில் ஒரு தாதியின் குடும்பத்தில் ஏனையவர்களும் தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply