மட்டக்களப்பு- வாகரையில் 10 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது!!

மட்டக்களப்பு வாகரை கதிரவெளி பிரதேசத்தில் 10 போத்தல் கசிப்புடன் கசிப்பு வியாபாரியான பெண் ஒருவரை நேற்று (வியாழக்கிழமை ) இரவு கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று வியாழைக்கிழமை கதிரவெளி பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் பொது  கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் வீட்டின் அலுமாரியில் விற்பனைக்காக வைத்திருந்த 10 போத்தல் கசிப்பை பொலிசார் கைப்பற்றினர்

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜரர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply