நீர்கொழும்பில் ஒருவருக்கு தொற்று; இழுத்து மூடப்பட்டது தனியார் மருத்துவமனை

நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்று இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய பிரதேசத்திலிருந்து மருந்து பெறுவதற்காக இளைஞர் ஒருவர் நீர்கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த தனியார் மருத்துவமனை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply