நாட்டை குறைந்தது 48 நாட்கள் முடக்க வேண்டும்!

கொரோனா நிலை குறித்து மக்களுக்கு உண்மையை கூறியதால் பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர் ஜயருவான் பண்டாரவை பதவிநீக்கம் செய்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். 

இந்த பணிப்பாளரை நியமித்தது தான் எனவும் ஆனால் அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்தே அரசியல் செய்ததாகவும் கூறிய ராஜித, வைத்திய பரிசோதனை துறையில் பாரிய முன்னேற்றங்களை கொண்டுவந்தவர் ஜயருவான் பண்டார எனவும் தெரிவித்துள்ளார். 

கடந்த முறை கொரோனா தொற்றின்போது வெளிநாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு நிலைமைகள் தொடர்பில் அறிக்கைகள் வழங்கப்பட்டு அதற்கேற்ற வகையில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தற்போது வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாட்டை குறைந்தது 48 நாட்களுக்காகவாவது முடக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply