இலங்கையில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி…!!

றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை சுகயீனம் காரணமாக கடந்த 07 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பின்னர் இந்த குழந்தை கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 05 மாத குழந்தையின் தந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த குழந்தை கடந்த இரண்டு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் நாளை மேலதிக சிகிச்சைக்காக இந்தியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் சோதனையின் போதே தந்தைக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பகுதியை சேர்ந்த இவர்கள் குழந்தையின் சிகிச்சைக்காக கொட்டிகாவத்தை பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply