Covid 19 தொடர்பில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்.

நாட்டில் கொரோனா வைரஸ்சினுடைய அச்சுறுத்தல்  அதிகரித்து வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்று வருகின்றதுமுல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபையின் தவிசாளர் செயலாளர்கள் பொதுப்போக்குவரத்து சம்பந்தமான தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply