உடனடியாக நிறுத்துங்கள் – கிளிநொச்சி அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய மறு அறிவித்தல் வரை அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட அரச திருமதி றூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்களை மேற்கொள்ளும் வகையில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை நடாத்த வேண்டாம் என்றும் விழாக்கள், நிகழ்வுகளை குறைத்துக் கொள்ளுமாறும், சுகாதாரபாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் அறிவித்துள்ள அரச அதிபர் தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்துமாறும் அறிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply