நாடாளுமன்ற பணியாளரின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா: சபாநாயகர் வெளியிட்ட தகவல்

கொழும்பு பத்தரமுல்லை, பெலவத்தையிலுள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர் பிரிவு உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த பிரிவிலுள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அப் பிரிவிற்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற நடவடிக்கை ஊழியர் பிரிவில் சேவையொன்றை பெற்றுக் கொள்வதற்காக அங்கு சென்ற தனக்கு 35 வினாடிகளிலிருந்து அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா கருத்து தெரிவிக்கும் போது பதிலளித்த சபாநாயகர் இந்த தகவலை மன்றில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply