வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த நபர்!

இந்தியாவிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைதாகியுள்ளார்.

முத்துராஜ் என்ற குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்னால் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த குறித்த சிறுமி, அழுதவாறு தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அருகிலுள்ள காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply