ஆடைத் தொழில்சாலையில் முன்கூட்டியே பரவி விட்டது: ஊழியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் மத்தியில் செப்டம்பர் 20ஆம் திகதியே கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதாக தொழிலாளர்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காய்ச்சல் இருமல் போன்ற பாதிப்புகள் குறித்து முறைப்பாடு செய்த தொழிலாளர்களுக்கு குறித்த நிறுவனத்தின் மருத்துவ நிலையம் வலி நிவாரணிகளையே வழங்கியது என தனிமைப்படுத்தலில் உள்ள நோயாளியொருவர் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ஆம் திகதி அளவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டனர் என தொழிலாளர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தொழிற்சாலையின் சில ஊழியர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply