முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்! அலி சப்ரியிடம் கோரிக்கை

முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தப்பட வேண்டிய விதிகள் உள்ளிட்ட 7 பிரதான விடயங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளித்தது.

பேரவையின் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தலைமையில் பத்து பிரதி நிதிகள் அடங்கிய தூதுக்குழு இச்சந்திப்பில் கலந்து கொண்டது.

இச்சந்திப்பில் முஸ்லிம் விவகாரத்துச் சட்டம் தொடர்பில் பேசப்பட்டன. பின்னர் இது தொடர்பான மகஜரும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

முஸ்லிம் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தப்பட வேண்டிய அறிக்கையை ஒரு மாதத்தில் சமர்ப்பித்தல்,

மத்ரஸா விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, புதிய முன்மொழிவை ஒப்படைத்தல்,

தொற்று நோயால் மரணிக்கும் உடல்களை (தகனம் செய்யாமல்) அடக்கம் செய்தல்,

கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பது

காதி நீதிபதிகளுக்காக அரச அங்கீகாரம் பெற்ற வை.எம்.எம்.ஏ. பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்தல்,

காதி நீதிபதிகளுக்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடு தயாரித்தல்.

காதி நீதிபதிகளுக்கான விதி முறைகள் அடங்கிய அச்சிடப்பட்ட 5 ஆயிரம் கோப்புகளை வழங்குதல் போன்ற விடயங்களே அந்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இத்தூதுக் குழுவில், தவிசாளர் (தேசிய விவகாரங்கள்) கே.என். டீன், தேசிய பொதுச் செயலாளர் (காதி நீதிபதி, சட்டத்தரணி) சாபீர் சவாத், முன்னாள் தலைவர்களான காலித் எம். பாரூக், எம்.என்.எம். நபீல், சட்டத்தரணி அஷ்ரப் ரூமி, ஜனாதிபதி சட்டத்தரணி இல்யாஸ், வை.டபிள்யூ.எம்.ஏ. தலைவர் பவாஸா தாஹா, டாக்டர் மரீனா ரிபாய், விசேட உறுப்பினர் லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply