புத்தளத்திலும் கொரோனா – முடக்கப்பட்டன சில பகுதிகள்

புத்தளம் – ஆடிகம – பூனவிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆனமடுவ ஆடிகம கிராமம் உட்பட பல பகுதிகளுக்கு இன்றுமுதல் பொலிஸாரால் உள்நுழைதல் மற்றும் வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த இளைஞன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொழில்புரிந்துவந்த நிலையில் விடுமுறைக்காக கிராமத்திற்குத் திரும்பியிருக்கின்றார்.

திடீர் நோய்வாய் பட்டதை அடுத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் மஹகும்புக்கடவல, சியம்பலகஸ்வெவ, பூனவிட்டிய உள்ளிட்ட கிராமங்களுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேற இன்று தொடக்கம் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

Be the first to comment

Leave a Reply