அடுத்த 7 நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும்! இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

கோவிட் தொற்றுநோயாளர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அடுத்த 7 நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கலாம் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரிக்கின்றார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் பயன்படுத்திய இடங்கள், அவர்களின் இருப்பிடங்கள் மற்றும் அவர்கள் செல்லும் கடைகள் மீது கவனம் செலுத்தி அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு அடுத்த ஏழு நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றக்கூடும் என்றும் இராணுவ தளபதி கூறினார்.

இதன் பின் ஒன்று அல்லது இரண்டு பாதிக்கப்பட்ட நபர்களைக் காணக்கூடி வரும்.

இதையடுத்து அந்த பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Be the first to comment

Leave a Reply