தற்போதைய கொரோனா தொற்று தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுதத்சமரவீர.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் கொரோனாவினால் பாதிக்கப்படுவதற்கு முனனரே பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கொரோனா தொற்று வார இறுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் 20ம் திகதி முதல் பலர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுளளார்.

குறிப்பிட்ட பெண்மணி மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே ஆடைதொழிற்சாலையில் பலர் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply