திடீரென உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவந்த மேலதிக தகவல்கள்

மினுவாங்கொடையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருநத ஒரு தொகுதியினர் நேற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக் அழைத்து செல்லப்பட்டனர்.

நுவரெலியாவில் உள்ள கல்கந்த என்ற தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கம்பஹா, மினுவாங்கொட, மகர மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஊழியர்களுடன் தொடர்பிலிருந்த 80 பேர் 2 பேருந்துகளில் சென்றுள்ளனர்.

அந்தப் பெண் பேருந்தில் இருக்கும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா – உடுபிட்டி, வராபலான இலக்கம் 81இல் வசிக்கும் 68 வயதுடைய ஏ.எம். அருண காந்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply