18 நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது

பிரதான ரயில் பாதையில் ராகம, படுவத்த தொடக்கம் யத்தல்கொட வரையில் 18 ரயில் நிலையங்களில், (07) நள்ளிரவு முதல் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்று, ரயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதேவேளை, புத்தளம் ரயில் பாதையில் பேரலந்த தொடக்கம் குரண வரையில், (07)  நள்ளிரவு முதல்  குறிப்பிட்ட பகுதிக்குள் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply