அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பில் சமலிடம் முறையிட்ட சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் அம்பாறை மாவட்ட பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் அபகரிக்கப்படும் விடயம் தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவின் கவனத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு சென்றுள்ளார்.

இதன் போது காணிகள் குறித்தும் அதனால் அப்பகுதியில் ஏற்படவுள்ள இன முரண்பாடுகள் குறித்தும் அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

அத்துடன், அதனால் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய தமிழ், சிங்கள இன முரண்பாடுகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் இதன் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் இருப்பதையும் சுட்டி காட்டியிருந்தார்.

இதனை கேட்டறிந்த அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அது குறித்து முடிவுகளை விரைவில் அறிவிப்பதாக இரா.சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் இந்த அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply