கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா

 கொழும்பு, காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கபடுகின்றது.   குறித்த பெண், சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.   கம்பஹா, மீரிகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே, இவ்வாறு கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.   குறித்த பெண் தற்போது ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   இந்நிலையில், மினுவாங்கொடை கொரோனாத் தொற்றுப் பரவலுக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply