தப்பியோடிய கொரோனா நோயாளி: பொலிஸார் விடுத்த அவசர அறிவிப்பு!

கொழும்பு – றாகமை மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நபரை கண்டால் காவற்துறையினருக்கு பொது மக்கள் தகவல் வழங்க வேண்டும் எனவும் இவரை உடனடியாக கைது செய்யாவிட்டால் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply