ஊடகவியலாளர்களால் வைரஸ் பரவும் அபாயம்! அரசாங்கம் எச்சரிக்கை

பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தனி வெடிப்பு ஆரம்பித்த நாள் முதல், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் ஊடாக வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இப்போது 800ஐ தாண்டியுள்ளதாக, பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது, கொரோனா வைரஸ் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையிடுவதில், வைத்தியசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிகிச்சை பெறும் இடங்களுக்குச் சென்று ஊடகவியலாளர்கள் பணியாற்றுவது ஆபத்தானது என அரச தகவல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

“இந்த சூழ்நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் தொடர்புடைய ஊடக நிறுவனங்களின் பிற ஊழியர்களின் உடல்நலத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்படக்கூடும்” என அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply