முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்

முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று(6) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள் வாகன உரிமையாளர்கள் பஸ்களில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply