கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்த ஐந்து பேர் தொடர்பில் வெளியான செய்தி

புங்குடுதீவு கொரோனா தொற்றாளியான பெண் சென்ற பருத்தித்துறை பஸ் வண்டியில் பயணித்த பயணிகளில் பருத்தித்துறை தும்பளை ஐயனார் கலட்டியைச் சேர்ந்த 5 பேர் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு சென்று தம்மை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பருத்தித்துறை கொழும்பு பஸ் வண்டியில் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்திருந்தார். அவர் ஞாயிறு அதிகாலை 4.30 மணியளவில் கொடிகாமம் வந்து இறங்கினார்.

ஆகையால் பருத்தித்துறை பஸ் வண்டியில் பயணித்தோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத் குறித்த பஸ் வண்டியில் பயணித்த வடமராட்சி வாசிகள் துன்னாலை, நெல்லியடி, பருத்தித்துறை ஆகிய இடங்களில் இறங்கியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply