பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு மைத்திரி என்னை அழைக்கவில்லை – ரணில்

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லையென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முதல் தடவையாக சாட்சியமளிக்கும் போதே ரணில் இதனை தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு, 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தனக்கு ஒரு நூல் ஒன்றைக் கூட எழுத முடியுமென தெரிவித்தார்.

மேலும் 52 நாள் அரசாங்கத்தின் போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபஷவிடம், அவருக்கு பாதுகாப்பு சபைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததா? என தான் வினவியதாகவும் அவருக்கும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply