மேலும் 10 யாழ் யுவதிகளுக்கு கொரோனா – அதிர்ச்சியில் குடாநாடு!

மினுவாஙகொட கொரோனா தொற்று அலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவை சேர்ந்த 9 பேரும், சாவகச்சேரியை சேர்ந்த ஒருவருமான 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் தற்போது கொழும்பிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து செல்லவில்லை. உறவினர்களும் சென்று பார்வையிட்டிருக்கவில்லையென்றும் தெரிவித்தபார்.

Be the first to comment

Leave a Reply