மினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ளதாம்!

Sri Lankans wait to give swab samples to test for COVID-19 outside a hospital as a health official walks past in Minuwangoda, Sri Lanka, Tuesday, Oct. 6, 2020. (AP Photo/Eranga Jayawardena)

மினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி ஏற்கனவே ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் பலர் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக அவதிப்பட்டதாக, தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட பெண், முதலாவதாக தொற்றுக்குள்ளான பெண் அல்லவென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண்ணுக்கு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதியே நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழிற்சாலை ஊழியர்களின் தகவல் பெறும் போது செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து பலருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர் அந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதார பிரிவிடம் தெளிவுப்படுத்தினோம். தொழிற்சாலைக்கு வெளிநாட்டவர்கள் வந்தமைக்கான சாட்சிகள் இன்னமும் கிடைக்கவில்லை.

எங்கிருந்து இவர்களுக்கு நோய் தொற்றியதென கண்டுபிடித்து விட்டால் நல்லது. அவ்வாறு இல்லை என்றாலும் எங்களால் நோயை கட்டுப்படுத்த கூடிய வல்லமை உள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply