“நான் எங்கும் செல்லவில்லை, அவர்கள் மீது எனக்கு சந்தேகம்” பாதிக்கப்பட்ட முதல் பெண் வெளியிட்ட தகவல்கள்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் முதலாவதாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட திவுலபிட்டி பெண் “தனது பணியிடத்தைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை” என்று கூறியுள்ளார்.

காலையில் வேலைக்குச் செல்ல தொழிற்சாலையின் வாகனத்தில் ஏறிய பிறகு, இரவு வீடு திரும்புவதாகவும், ஒரு கடைக்கு கூடச் செல்ல தமக்கு நேரமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசிவாயிலாக இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பான குரல் பதிவையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

“தொழிற்சாலையிலிருந்து தான் எனக்கு தொற்றியிருக்க வேண்டும்” என்று சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply