கொரோனா தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்தியரை நீக்கியது ஏன்? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி!

கடந்த சில மாதங்களாக சமூகத்தில் கொரோனா வைரஸ் காணப்பட்டது என தெரிவித்ததன் காரணமாகவே மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயரூவன் பண்டார அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சமூகத்தில் கொரோனா வைரஸ் காணப்பட்டது என தெரிவித்தமைக்காக மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயரூவன் பண்டார அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மருத்துவ ஆராய்ச்சி பிரிவே நாட்டில் கொரோனா வைரஸ் சோதனைக்கு பொறுப்பானது.

அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்? அரசாங்கம் இந்த விவகாரத்தில் எதையோ மூடி மறைக்க விளைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply