யாழ். புங்குடுதீவு பெண்ணுக்கு கொரொனா

ஹம்பகா மாவட்டத்திலிருந்து வருகைதந்திருந்த நிலையில் யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்ட இரு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

மினுவாங்கொட வைத்தியசாலையிலிருந்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த பெண்ணுக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறித்த பெண் உடனடியாக தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார்.

Be the first to comment

Leave a Reply