யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமையே கிடைக்கப்பெறும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply