தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் ஊடாகவும் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த பகுதிகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லையென அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரும்வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply