தம்புள்ளையிலும் கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிபவர் என்பதோடு விடுமுறைக்காக கடந்த 03ஆம் திகதி தம்புள்ளை வில்கமுவவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் வைத்து அவருக்கு சுகயீனம் ஏற்பட்டபோது அம்பியூலன்ஸ் அழைக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றது.

Be the first to comment

Leave a Reply