சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாத பெண் வேண்டும் – திருமண விளம்பரம் கொடுத்த நபர்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த 37 வயதான சாட்டர்ஜி, செய்தித்தாள் ஒன்றில் திருமண விளம்பரம் வழங்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் தன்னைப் பற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளார். மேலும் தனக்கு வரப்போகும் மனைவியின் தகுதிகளையும் குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரத்தின் புகைப்படத்தை, நிதின் சங்வன் எனும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த செய்தித்தாள் விளம்பரத்தில் சாட்டர்ஜி, தான் வழக்கறிஞர் குடம்பத்தை சேர்ந்துள்ளதாகவும், தனக்கு பெற்றோர்கள் உள்ளார்கள் எனவும், தனக்கு சொந்தமாக கார் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது வீடு கமர்புக்கூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்த அவருக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தனது மனைவியின் தகுதிக்கான தேவைகளைக் கூறியுள்ளார். எதிர்பார்ப்புகள் இல்லையென கூறியிருந்த அவர், தனக்கு உயரமான அழகான மெல்லிய மனைவி வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவி சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்று தனது கோரிக்கையைத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply