திலீபனின் படம் இருந்த பத்திரிகையை பறித்த பொலிஸ்!

சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் இடம்பெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தின் போது யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் பத்திரிகை ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்த போது பொலிஸ் அதிகாரி ஒருவரை அதனை பறித்துச் சென்றுள்ளார்.

அப்பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாக தீபம் திலீபனின் புகைப்படம் இருந்தது. அப்போது வந்த ஒரு பொலிஸ் அதிகாரி அந்த பத்திரிகையினை பறித்து சென்றார்.

அருகில் இருந்தவர்கள் கடும் எதிர்பினை வெளியிட பறிக்கப்பட்ட பத்திரிகையை குறித்த பொலிஸ் அதிகாரி திரும்பக் கொடுத்துவிட்டு சென்றார்.

Be the first to comment

Leave a Reply