அதர்வா, ப்ரியா பவானி சங்கர் திரைப்படம் பற்றிய தகவல்..

யதார்தபூர்வமான கதையம்சம் கொண்ட வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல நடிகராக பெயரெடுத்தவர் அதர்வா. ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்ததது.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம்,ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட படங்கள் வெளியாகுவது சில காரணங்களால் தள்ளிப்போனது.இதனை அடுத்து தள்ளிபோகாதே, படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் .8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார்.

ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் டி.முருகானந்தம் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.ராதிகா,ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Be the first to comment

Leave a Reply