13 வயது மாணவி குளிக்கும்போது இரகசியமாக படம்பிடித்த 15 வயது சிறுவர்கள் இருவர் கைது!

13 வயது மாணவியின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோவை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த 15 வயதான இரண்டு சிறுவர்களை மினுவங்கொட பொலிசார் நேற்று (24) கைது செய்தனர்.

தமது மகளின் நிர்வாண புகைப்படத்தை அயல்வீட்டார் ஒருவருக்கு, சிறுவர்கள் காண்பித்ததாக தெரிவித்து, 13 வயதான சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், 15 வயதான சிறார்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களும், சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள்.

இரண்டு சிறுவர்களும் தமது பெற்றோருடன், நேற்று மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இரண்டு சிறுவர்களில் ஒருவர் வைத்திருந்த விலையுயர்ந்த கையடக்க தொலைபேசியை ஆராய்ந்தபோது 20 ஆபாச படங்கள் காணப்பட்டன. அதில் குறிப்பிட்ட 13 வயது சிறுமியின் வீடியோவும் காணப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரையும் விசாரித்தபோது, ​​சிறுமி குளியலறையில் குளிக்கும் போது பெண்ணுக்கு தெரியாமல் நுட்பமான முறையில் கையடக்க தொலைபேசியின் மூலம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்ததாக தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவருமே தற்போது பாடசாலைக்குச் செல்வதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

சிறுவர்கள் விவகாரத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் ஊடாக இரண்டு சிறுவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply