கண்டியில் தாழிறங்கிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்!

கண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த அனர்த்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தம்பதியினர் மற்றும் அவர்களின் குழந்தையின் இறுதி நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

20.09.2020 அதிகாலை 5 மணியளவில் 5 மாடிக் கட்டமொன்று பூமிக்குள் தாழிறியங்கியதால் அதன் இடிபாடுகள் காரணமாக அதற்கு அருகில் இருந்த ஹோட்டலொன்றின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் மிகவும் உயிரிந்துள்ளனர்.

உயிரிழந்தவர், சரிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்திற்கு அருகில் ஹோட்டலொன்றை நடாத்தி வந்துள்ளதோடு, அந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு அறையிலும்

மனைவியின் தாய் மற்றும் மற்றுமொரு பெண்ணொருவரும் மற்றொரு அறையிலும் தங்கியிருந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளைத் தொடர்ந்து ஒன்றரை வயது குழந்தை மீட்கப்பட்டு, கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

மற்றைய அறையில் தங்கியிருந்த உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் அங்கு பணி புரிந்த பெண் ஒருவர் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கிய சடலங்களைத் தேடும் பணியில் சுமார் 50 இராணுவம் விமானப்படையினர் கண்டி மாநகர தீயணைக்கும் பிரிவுவைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஈடுபட்டிருந்தது.

இச்சம்பவத்தில் சமில பிரசாத் (வயது-35), அச்சலா ஏகநாயக்க (வயது-32) மற்றும் அவர்களது ஒன்றரை மாத குழந்தை ஆகியோர்களே இடர்பாடுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் அச்சலா ஏகநாயக்க, சட்டத்தரணியும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளருமாவார் எனவும் தெரியவருகிறது.

கணவன், மனைவி ஆகியோர் கட்டடத்தினுள், கொன்கிரீட் தூண் மற்றும் சுவரின் இடைக்குள் உயிரிழந்தள்ள நிலையில் காணப்பட்டதோடு, குறித்த கொன்கிரீட் தூண் வெட்டப்பட்டு உடல்கள் வெளியே எடுத்ததாக, கண்டி மாநகர தீயணைப்பு படையின் பொறுப்பதிகாரி சி.எஸ். பெரேரா கூறினார்.

உயிரிழந்த அச்சலா ஏகநாயக்கவின் தாயார் ஜெயந்தி ஏகநாயக்க (60) இது தொடர்பில் தெரிவித்ததாவது;

நான் ஹோட்டலில் பணிபுரிந்த பெண் ஒருவருடன், ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன்.

மருமகனும் மகளும் குழந்தையும் மற்ற அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதிகாலை 5 மணியளவில் ஒரு பெரிய அதிரும் சத்தம் கேட்டது.

எதுவும் தென்படவில்லை. எமது அறையின் சுவர் இடிந்து எமது கட்டிலின் அருகிலேயே வீழ்ந்ததுநாலா பக்கவும் எதுவும் தெரியவில்லை.

தொலைபேசி கையில் சிக்கியது. அதில் 119 ஐ அழைத்து வீடு இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்தேன். சிறிது நேரத்திலேயே பொலிஸார் அங்கு வந்தனர்.

ஒரு குழு கயிறுடன் இறங்கி எங்கள் இடத்திற்கு வந்து எங்களை அழைத்துச் சென்றனர். எனது மகளும் அவரது கணவரும் இருந்த அறை முற்றாக தரைமட்டமாக இருந்தது- என்றார்.

Be the first to comment

Leave a Reply