கொழும்பில் உடையும் அபாயத்தில் உள்ள கட்டடம் – அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்

கொழும்பு, கொள்ளுபிட்டியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை கட்டடத்தின் ஊழியர்கள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டடத்தின் சுவரில் ஏற்பட்ட பிளவு காரணமாக அச்சத்தில் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

கட்டடம் தாழிறங்கும் அபாயம் காணப்படும் அச்சத்திலேயே ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய கட்டட நிர்மாண பணிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply