மண்ணுக்குள் விதையான வீரத் தமிழிச்சிகளின் வித்துடல்கள் மீட்பு

கிளிநொச்சி – முகமாலை முன்னரங்கு பகுதியில் பெண் போராளிகளினுடையது என அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகள்  மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அகழ்வு பணிக்காக திகதியிடப்பட்டு, பெலிசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதியினை பாதுகாப்பு செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

இதில் இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள் மீட்கப்பட்டதுடன் ஒரு தொகுதி எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டது.

விடுதலைப் புலிகளால் வழங்கப்படும் அந்த இலக்கத்தடுகளில் த.வி.பு ஞா 0302 மற்றும் த.வி.பு. ஞ 0188 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

B+ பிளஸ் மற்றும் O +பிளஸ் ரத்த வைகையை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது அது சோதியா படையணியை சேர்தவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது,

குறித்த எலும்புக்கூடுடன் மண்டையோடும் மீட்கப்பட்டுள்ளது. எதிரியிடம் அகப்பட்டால் தமது உயிரை மாய்பதற்காக விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் சைனட் (குப்பி) ஒன்றும் பெண் போராளிகள் இடுப்பில் அணியும் பட்டியும் மீட்கப்பட்டது .

அத்துடன் உரப்பைகள், விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், பச்சை கலர் சிரூடைகள், பாட்டா ஒன்று பற்றிகள், சம்போ போத்தல்கள், போன்றவையும் மீட்க்கப்பட்டுள்ளது

துப்பாக்கி ஒன்று, கைக்குண்டு இரண்டு ,மகசீன் 8, கோல்சர் கவர் மூன்று போன்றவையும் மீட்க்பட்டுள்ளது

மேலும் தலைவர் பிரபாகரனுடையது என அடையாளப்படுத்தப்பட்ட புகைப்படங்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவின்படி தொடர்ந்து இன்றைய தினமும் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

Be the first to comment

Leave a Reply