கிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..!!

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தினூடாக ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அரச அதிகாரிகளையோ, பொதுமக்களையோ பொதுவெளியில் தொண்டையில் பிடித்து மிரட்டுமளவுக்கு அந்த அதிகாரங்கள் அங்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை அப்படி எந்த ஒரு ஜனாதிபதியும் இதுவரை செய்யவும் இல்லை.

ஆனால் பௌத்த துறவி ஒருவர் பொதுவெளியில் அரச கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அரச அதிகாரியை தொண்டையில் நெரித்து எச்சரிக்கை செய்த சம்பவம் மட்டக்களப்பில் நிகழ்ந்துள்ளது.

அரசியலமைப்பு, ஜனாதிபதி ,அரச அதிகாரிகள், காவல்துறை திணைக்களம் ஆகியவற்றை மீறிய எழுதப்படாத வரம்பு மீறிய அதிகாரம் பௌத்த துறவிகளுக்கு உள்ளதா???

உண்டெனின் இந்த நாட்டை ஆழ்வது அரசயலமைப்பா???
அல்லது பௌத்த பீடமா??? என்ற கேள்விக்கான பதிலை மக்களுக்கும் இலங்கை நாட்டின் இறையான்மைக்கும் பெற்றுத்தருவது யார்???

போலீசாரா?

நீதிமன்றமா?

சட்டமாதிபரா?

நீதியமைச்சரா?

கெளரவ பிரதமரா? அல்லது  கெளரவ ஜனாதிபதி அவர்களா?
கிழக்கு அரசியல் பிரதிநிதிகளிடமே இந்த கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.

Be the first to comment

Leave a Reply