மேலும் 724 பேர் இலங்கை திரும்பினர்

கொரோனா தொற்றின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வௌிநாட்டில் தங்கியிருந்த மேலும் 724 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து 268 பேரும் டுபாயிலிருந்து 420 பேரும் இந்தியாவிலிருந்து 06 பேரும் ஜப்பானிலிருந்து 10 பேரும் நாடு திரும்பியுள்ளதாக கொவிட் – 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இவர்கள், PCR பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply