மஞ்சள் வர்த்தகர்கள் இருவர் கடற்படையினரிடம் சிக்கினர்

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 818 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் சட்ட விரோதமாக நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

12 பைகளில் பொதியிடப்பட்ட 510 கிலோகிராம் மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து டிங்கி படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னாரை சேர்ந்த 26 மற்றும் 37 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் வங்காலை பகுதியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரையில் கைவிடப்பட்ட 5 பைகளில் இருந்து 308 கிலோகிராம் மஞ்சளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply