விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது கார் ஏற்றிய பெண்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது கார் ஒன்று ஏறிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

செப்டம்பர் 11ம் திகதி மாநில தலைநகர் மும்பையில் உள்ள மல்வானி பகுதியிலே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

3 வயது குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் ஒன்று குழந்தை மீது மோதி ஏறிச்சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த குழந்தை மயங்கிய நிலையில் சாலையிலே கிடந்துள்ளான்.

இதனையடுத்து மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், தற்போது தொடர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்து வீடு திரும்பியுள்ளார்.

கார் ஓட்டுநர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply